சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்: எப்படி சாப்பிடலாம்?
வெண்டைக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் பல மருத்துவ நன்மைகளை பெறலாம்.
வெண்டைக்காயில் ஃபோலிக் அமிலம், விட்டமின் C, பொட்டாசியம், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது.
வெண்டைக்காயை எப்படி சாப்பிட வேண்டும்?2 பிஞ்சு வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டி, அதனுடன் மிளகுப்பொடி சேர்த்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் மூட்டுவலி குறையும்.
வெண்டை செடியின் வேரை நசுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதை குடித்து வர வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரையின் எரிச்சல், கொப்புளங்கள், தோல் மற்றும் பால்வினை நோய்கள் ஆகியவை சரியாகும்.
வெண்டை இலைகளை துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதை காலை, மாலை குடித்து வர கழிச்சல், சீதபேதி குணமாகும்.
வெண்டை இலை அல்லது இளம் வெண்டைக் காய்களை அரைத்து தோல் மீது தடவினால் தோல் அரிப்பு நோய்கள் சரியாகும்.
வெண்டையின் இலைகள், வேர்கள், காய்கள் ஆகியவை மலச்சிக்கல், மலட்டு தன்மை, புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்: எப்படி சாப்பிடலாம்?
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment