தனிநாடு அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிடுகிறது கட்டலோனியா
ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிவது தொடர்பான முக்கியமான அறிவிப்பை வரும் திங்கட்கிழமை கட்டலோனியா வெளியிட உள்ளது.
ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகிதம் பேர் தனி நாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஏற்கனவே தன்னாட்சி பெற்ற மாகாணமாக உள்ள கட்டலோனியா தனிநாடாக பிரிவது அவசியமற்றது என ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெயினில் இருந்து பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 90 சதவிகித மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தனிநாடாக அறிவிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் கட்டலோனியா தலைவர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிநாடு அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிடுகிறது கட்டலோனியா
Reviewed by Author
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment