சர்க்கரை நோயாளிகளுக்கான கேழ்வரகு கார கொழுக்கட்டை
சர்க்கரை நோயாளிகள் தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று கேழ்வரகு கார கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான கேழ்வரகு கார கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு - ஒரு கப்,
- கடுகு - ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
- துருவிய கேரட் - கால் கப்,
- நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
- பச்சைமிளகாய் - 2,
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பின், கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அடுத்து இதில் உப்பு போட்டு, கேரட் பாதியளவு வெந்ததும் அதை வறுத்த மாவில் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் மாவை போட்டு கைவிடாமல் நன்றாக கிளறவும்.
பின்னர் இந்த மாவு சற்று ஆறியதும் கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
சூப்பரான ராகி கார கொழுக்கட்டை ரெடி.
ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கான கேழ்வரகு கார கொழுக்கட்டை
Reviewed by Author
on
October 05, 2017
Rating:
Reviewed by Author
on
October 05, 2017
Rating:


No comments:
Post a Comment