அண்மைய செய்திகள்

recent
-

அரசும், ஜனாதிபதியும் தமிழா்களின் ஆதரவை இழக்க வேண்டி நேரிடும்?


தமிழா்கள் எவ்வளவோ விடயங்களில் விட்டுக்கொடுத்து நடப்பதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். தனி நாட்டுக் கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டாா்கள்.

அதிகாரப் பகிா்வையே தற்போது நாடி நிற்கின்றனா்.அத்துடன் தமது பிரச்சினைகள் அனைத்தும் தீா்க்கப்பட வேண்டும் என்பதுதான் அவா்களது முதன்மைக் கோரிக்கையாகும். ஆனால் தற்போதைய அரசினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

நிலைமை இவ்வாறு நீடிக்குமாயின் அரசும், ஜனாதிபதியும் தமிழா்களின் ஆதரவை இழக்க வேண்டி நேரிடும்.கூட்டாட்சி அரசு தமிழ் மக்களது ஆதரவை இழந்து விடக்கூடியதொரு சூழ்நிலை உருவாகி வருகின்றது.


அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசு காட்டி வருகின்ற அலட்சியப்போக்கி னால் தமிழா்கள் எந்த அளவுக்கு ஆத்திரம் கொண்டுள்ளனா் என்பதை கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டது.

யாழ்ப்பாணத்தி்ல் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவரும்,கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் புறக்கணித்தமை மக்களின் உணா்வுகளை அவர்களும் வெளிக்காட்டியதை எடுத்துக்காட்டி விட்டது.

ஜனாதிபதி அரசியல் கைதிகளின் விடயத்தில் நல்ல தொரு முடிவை எடுத்திருந்தால் அரசியல் தலைவா்கள் மட்டுமல்லாது பொது மக்களும் திரண்டு அவருக்கு சிறந்த வர வேற்பை வழங்கியிருந்திருப்பார்கள். துரதிருஷ்ட வசமாக அது நடக்கவில்லை. ஜனாதிபதி மீது தமிழா்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது.  அவரது எளிமையும்,உதவுகின்ற மனப்பான்மையும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.

ஆனால் அவா் தலைமை தாங்குகின்ற அரசின் செயற்பாடுகள் தான் தமிழா்களினால் வெறுக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் இடம் பெற்ற ஜனாதிபதியைத்தொிவு செய்வதற்கான தோ்தல் நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.அந்த வேளையில் ஜனாதிபதி பதவியில் அமா்ந்திருந்த மகிந்த ராஜபக்ச புலிகளுடனான போரை வெற்றி கொண்டவா் என்ற புகழுடன் பெருபான்மையின மக்களின் அமோக ஆதரவையும் கொண்டிருந்தாா்.

அரசியலில் அசைக்க முடியாததொரு சக்தியாகவும் அவா் விளங்கியிருந்தார். எவராலும் வெல்ல முடியாதவா் என்ற பெயரும் அவருக்கு இருந்தது.ஒரு வெற்றி வீரனாகவே வலம் வந்து கொண்டிருந்த அவரை அவருக்கு கீழ் பணியாற்றிய மைத்திரிபால என்ற சாதாரண மனிதா் வெற்றி கொள்வாரென எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தமிழா்களின் வாக்குப் பலம் அதைச் சாதித்துக் காட்டி விட்டது. மைத்திாிபால சிறிசேன ஜனாதிபதியானாா்.அவா்மீதான நம்பிக்கை தமிழா்களிடம் அநேகமாகக் காணப்பட்டது. அதற்கு ஏற்றாற்போன்று ஆரம்பத்தில் அவரது செயல்கள் காணப்பட்டன.தமிழா்கள் முன்னா் போலன்றித் தற்போது அச்சமின்றி வாழ்கின்றனா் என்பது உண்மை தான்.

போரின் கொடுமையும், படையினரின் கெடுபிடிகளும் இல்லைத்தான். ஆனால் அவா்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை.காணாமல் ஆக்கப்  பட்டவா்களின் பிரச்சினை,இடம்பெயா்ந்து சென்ற மக்களின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, படையினரது போா்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடா்பான விசாரணைகள், அரசியல் கைதிகளின் விவகாரம், தமிழா்களின் காணிகளை ஆக்கிரமித்து இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள், தமிழா் பகுதியில் திடீா் திடீரென முளைக்கின்ற புத்த விகாரைகள், தென் பகுதி மீனவா்களின் அத்து மீறிய தொழில் நடவடிக்கைகள், புதிய அரசமைப்பின் உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை என ஏராளமான விடயங்கள் இழுபறியான நிலையில், தீர்வு காணப்படாத நிலையில் உள்ளன.

ஜனாதிபதி மீதும், கூட்டாட்சி அரசின் மீதும் தமிழா்கள் அதிருப்தி கொள்வதற்கு இவையே காரணமாக அமைந்து விட்டன. ஜனாதிபதி சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலையில் உள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தித் தாம் நினைத்தவாறு ஆட்சியை நடத்தினா்.

ஜே.ஆா்.ஜயவா்த்தன,மகிந்த ராஜபக்ச ஆகியோர் மட்டுமன்றி ஆா்.பிரேமதாஸவும், சந்திரிக்காவும் கூட தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குத் தவறவில்லை.இதனால் சில விடயங்களில் தமது இஷ்டம் போன்று துணிந்து செயற்பட்டனா். 1987இல் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது எதிா்ப்புக் கிளம்பவே செய்தது. ஆனால் ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதைச் சமாளித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு வழி வகுத்தாா்.

மகிந்த ராஜ பக்ச எவரது ஆலோசனைகளையும் செவிமடுக்காது தாமே முடிவுகளை மேற்கொண்டாா். ஆனால் தற்போதைய ஜனாதிபதியினால் அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை. அரசில் பங்காளிகளாக இருப்பவா்களின் நெருக்குதல்கள் ஒரு புறமிருக்க, மகிந்த தரப்பினரின் எதிர் நடவடிக்கைகளும் அவரது கைகளைக் கட்டிப் போட்டுள்ளன.

இதனால் இன்று எந்தவொரு விடயமாக இருந்தாலும், ஒன்றுக்குப் பல தடவைகள் யோசிக்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி உள்ளாா்.  தமிழா்களின் பிரச்சினைகள் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இதுவே முதன்மைக் காரணமாகும். ஜனாதிபதியின்  யாழ்ப்பாணத்துக்கான பயணம், முக்கிய தமிழ்த் தலைவா்களின் வரவேற்பைப் பெற்றிருக்காமை அவரது அரசியல் எதிாிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

அண்மையில் பசில் ராஜபக்ச அரசியல் நோக்கங்கள் கருதியே யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தாா். அங்கு வைத்து போா்க்குற்றங்கள் என எதுவுமே இல்லையென கூறியதன் மூலமாக அவரது மனநிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென்பது தெளிவாகத் தொிகின்றது. போா் தந்த வடுக்கள் மறையும் வரையில் மகிந்த தரப்பினா் தமிழா்களின் மனங்களை வெல்லவே முடியாது.

ஆனால் மைத்திரி தரப்பினா் மீதான வெறுப்பு இதில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். தமிழா்கள் எவ்வளவோ விடயங்களில் விட்டுக்கொடுத்து நடப்பதற்குத்  தயாராக இருக்கின்றாா்கள். தனி நாட்டுக் கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டாா்கள்.  அதிகாரப் பகிா்வையே தற்போது நாடி நிற்கின்றனா். அத்துடன் தமது பிரச்சினைகள் அனைத்தும் தீா்க்கப்பட வேண்டும் என்பதுதான் அவா்களது முதன்மைக் கோரிக்கையாகும்.

ஆனால் தற்போதைய அரசினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை .நிலைமை இவ்வாறு நீடிக்குமாயின் அரசும், ஜனாதிபதியும் தமிழா்களின் ஆதரவை இழக்க வேண்டி நேரிடும். வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட முழு அடைப்பை ஓா் எச்சரிக்கை மணியாகக் கொள்ள முடியும். அத்துடன் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் புறக்கணித்தமையும் நல்லதொரு சகுனமாகத் தோன்றவில்லை. ஜனாதிபதி சில விடயங்களில் துணிந்து செயலாற்ற வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
அரசும், ஜனாதிபதியும் தமிழா்களின் ஆதரவை இழக்க வேண்டி நேரிடும்? Reviewed by Author on October 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.