முருங்கன் பிரதேச வைத்தியசாலை 'ஆதார வைத்தியசாலையாக' தர முயர்வு-(photos)
மன்னார் முருங்கன் வைத்தியசாலை 'பிரதேச வைத்தியசாலையாக 'இயங்கி வந்த நிலையில் தற்போது முருங்கன் வைத்திய சாலை 'ஆதார வைத்தியசாலையாக' தர முயர்த்தப்பட்டுள்ளது.
முருங்கன் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட நிகழ்வு இன்று(24) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முருங்கன் ஆதார வைத்தியசாலையில் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில்,வைத்தியர்கள் சுகாதார அமைச்சரின் செயலாளர் சந்திரையா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முருங்கன் வைத்தியசாலை கடந்த பல வருடங்கலாக பிரதேச வைத்தியசாலையாக செயற்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது முக்கிய வைத்தியசாலையாக முருங்கன் ஆதார வைத்தியசாலை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
October 24, 2017
Rating:
No comments:
Post a Comment