பாலச்சந்திரனது வாழ்க்கை போன்றதே எங்களது வாழ்க்கையும்! ராகுல் காந்தி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனது வாழ்க்கையை போன்றே எங்களது வாழ்க்கையும் அமைந்திருந்ததாக இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரனது வாழ்க்கை எவ்வளவு போராட்டகளமாக இருந்ததோ அப்படித் தான் எங்களுடைய வாழ்க்கையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தொழிலதிபர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாங்கள் எங்கள் அப்பாவை அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு. எங்கள் அப்பாவை விடுதலைப் புலிகளின் தலைவர் கொலை செய்தார். தந்தையை இழந்த துக்கத்தில் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையை கொன்றவர் இலங்கையில் கடற்கரையில் இறந்து கிடந்தார். அதை பார்த்து நாங்கள் ஒரு போதும் மகிழ்ச்சியடையவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரனது வாழ்க்கை போன்றதே எங்களது வாழ்க்கையும்! ராகுல் காந்தி
 
        Reviewed by Author
        on 
        
October 11, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 11, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment