உலகளவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
சர்வதேச விருதைப் பெற்ற இலங்கைத் தமிழரான சோமசுந்தரம் வினோஜ்குமார் தேசிய மட்டத்திலும் தமது கண்டுபிடிப்புகளுக்காக தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் குறித்த இளைஞனுக்கு விருது வழங்கல் விழா நடைபெற்றுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வினோஜ்குமாரின் 14 கண்டுபிடிப்புகள் போட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இவற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள் தேசியரீதியில் தங்கப்பதக்கத்தையும் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன.
தங்கப்பதக்கத்துடன் ரூபா 1 இலட்ச பணப்பரிசும், வெண்கலப் பதக்கத்துடன் 30ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.
இவ்விருதுகள் இளம்விஞ்ஞானி வினோஜ்குமாரின் தேசிய ரீதியிலான 30ஆவதும் 31ஆவதுமான விருதுகளாகும்.
இதேவேளை சர்வதேச விருதொன்றையும் இதே விழாவில் வினோஜ்குமார் பெற்றுள்ளார்.
சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த உலக கண்டுபிடிப்பு அறிவியல் புலமைச்சொத்து ஸ்தாபனம் (World Invention Intellectual Property Associations(Switzerland) இந்த விருதை வழங்கியிருக்கிறது.உலகில் 97 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட குறித்த ஸ்தாபனம் நடத்திய போட்டியில் இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த வினோஜ்குமார், கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்று தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
உலக விருது கிடைத்த அவருக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தாக்குனர் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான அழைப்பு தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
Reviewed by Author
on
October 28, 2017
Rating:

No comments:
Post a Comment