பயன்பாட்டுக்கு வந்த ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் முதல் பேருந்து: பயணிகள் மகிழ்ச்சி
பவேரியா நகரில் தான் முதன் முதலாக பயணம் தொடங்கப்பட்டது. ஜேர்மனியின் போக்குவரத்து நிறுவனமான Deutsche Bahn சார்பில் வியாழனன்று வெள்ளோட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சென்சார் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பேருந்து, ஓட்டுனர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறது.
ஜேர்மனியில் தொடங்கப்பட்டுள்ள ஓட்டுனர் இல்லாத முதல் பேருந்து என்ற பெருமை EasyTen-க்கு கிடைத்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்தின் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாக Deutsche Bahn நிறுவனத்தின் சி.இ.ஓ ரிச்சர்ட் லுட்ஸ் தெரிவித்துள்ளார்.
Deutsche Bahn நிறுவனம் வருங்காலத்தில் மினி பேருந்துகளை ஜேர்மனியில் கொண்டு வர நினைக்கிறது.
செல்போன் செயலியில் முன்பதிவு செய்தால் பயணிகள் வீட்டுக்கே சென்று மினி பேருந்து அவர்களை வாகனத்தில் ஏற்றி கொள்ளும் வசதியையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு வந்த ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் முதல் பேருந்து: பயணிகள் மகிழ்ச்சி
Reviewed by Author
on
October 28, 2017
Rating:
No comments:
Post a Comment