கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: நேரடி ஆட்சியை அறிவித்தார் ஸ்பெயின் பிரதமர்
ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்த சிலமணி நேரத்திலேயே கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்து அங்கு நேரடி ஆட்சியை ஸ்பெயின் பிரதமர் அமல்படுத்தியுள்ளார்.
ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் திகதி நடத்தியது. வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90 சதவீதம் பேர் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளித்தனர்.
இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுகொள்வதாக அறிவித்தார்.
ஆனால் இதுதொடர்பான உறுதியான முடிவை கார்லஸ் வெளியிடாத நிலையில் அங்கு நேரடி ஆட்சியை கொண்டு வர ஸ்பெயின் அரசு தீர்மானித்தது. இந்நிலையில், ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் நேற்று அறிவித்தது.
இதை தனிநாடு கோரிய கேட்டலோனியா ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இதையடுத்து கூடிய ஸ்பெயின் அரசு கேபினட் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, கேட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் கேட்டலேனியா பிரிவினைவாத தலைவர் சார்லஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த பிரதமர் மரியானோ ராஜோய், டிசம்பர் 21-ம் திகதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Reviewed by Author
on
October 28, 2017
Rating:

No comments:
Post a Comment