உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை!
தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலையில் பாதிப்பு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷாரா உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மூவரினதும் மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக வழக்கு விசாரணைகளை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் அரசியல் கைதிகள் மூவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த 8ஆம் திகதி முதல் நீர் ஆகாரத்தையும் முற்றிலும் துறந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காது போனால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கூறியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்து பேசியிருந்த போதிலும், அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை!
Reviewed by Author
on
October 19, 2017
Rating:

No comments:
Post a Comment