முல்லைத்தீவு கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் - சாதிக்க வேண்டியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!
முல்லைத்தீவு பெருங்கடலில் நீச்சலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏனைய ஐந்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பெரும் அலையில் சிக்கிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட ஏனைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 17 மற்றும் 18 வயதுடைய கிளாட்டஸ் வினோசன் மற்றும் அன்ரன் அமல்ராஜ் டினோசன் ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அன்ரனி கிளாட்டஸ் வினோசன் (குரூஸ் வயது 18) என்பவரது சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்ரனி கிளாட்டஸ் வினோசன் குரூஸ் என்னும் மாணவன் 2018ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் உயர்தர பரீடசைக்கு தோற்றவுள்ளார்.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த கிளாட்டஸ் வினோசன், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.படிப்பில் மிகவும் திறமையான மாணவனாக திகழ்ந்த இவர் உயர்தர பரீட்சையில் மிகவும் நல்ல பெறுபேறுகளை பெறக் கூடியவர் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அன்ரன் அமல்ராஜ் டினோசன் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
முல்லைத்தீவு கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் - சாதிக்க வேண்டியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!
Reviewed by Author
on
October 19, 2017
Rating:

No comments:
Post a Comment