தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி
இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரிகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
இக்கொண்டாட்டத்தில் டிரம்பின் மகளான இவான்கா டிரம்ப்பும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு முன்பாக இவான்கா விர்ஜினியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அமெரிக்காவில் முதன்முறையாக ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலேயே தீபாவளி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி
Reviewed by Author
on
October 19, 2017
Rating:

No comments:
Post a Comment