ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம்: ஏன் இந்த நிலைமை?
ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வரும் பள்ளுக்கூடம் விரைவில் மூடப்படலாம் என்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவின் Skipton நகரில் இங்ஸ் சமுதாய முதன்மை மற்றும் நர்சரி பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.
இங்கு தற்போது பத்து வயதான ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். முழுநேர ஆசிரியை, பகுதி நேர ஆசிரியை உட்பட சிலர் ஊழியர்களாக பணி செய்து வருகிறார்கள்.
கடந்த வருடம் 42 பேர் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், 41 பேர் வேறு பள்ளிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கூடம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மூடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவியின் தந்தை கூறுகையில், நான் உட்பட என் குடும்பத்தில் பலர் இந்த பள்ளியில் தான் படித்தோம். ஏன் இதை மூட நினைக்கிறார்கள் என தெரியவில்லை என கூறியுள்ளார். பள்ளியின் ஆசிரியை Donna கூறுகையில், மாணவிக்கு சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது. மாணவி உணவு தொழில்நுட்பம் குறித்து படித்து வருவதாக கூறியுள்ளார்.
ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம்: ஏன் இந்த நிலைமை?
Reviewed by Author
on
October 01, 2017
Rating:
Reviewed by Author
on
October 01, 2017
Rating:


No comments:
Post a Comment