அண்மைய செய்திகள்

recent
-

இன்று ஐ.நா தினம்! ஐக்கிய நாடுகள் சபை என்றால் என்ன? அறிய வேண்டிய விடயம் -


ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN) உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி மற்றும் பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு சபையே ஐக்கிய நாடுகள் சபை.ஐ.நாவின் பொதுசபை (General Assembly) நியூயோர்க்கில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 24.10.1945 உருவாக்கப்பட்டது. இன்றுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கு 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

ஐ.நாவின் மொத்த உறுப்பு நாடுகள் 193 ஆகும். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் வீட்டோ அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு “வீட்டோ” செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாக,

பிரான்ஸ் ரஷ்யா பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இந்த வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளே நிரந்தர உறுப்பு நாடுகளுமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது கூட்டம் லண்டனில் 1946ஆம் ஆண்டு நடைபெற்றது. “ஐக்கிய நாடுகள் சபை” என்ற பெயரை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் சூட்டினார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். பிரிட்டன் ராஜதந்திரி க்ளெட்வின் ஜேப் முதலாவது ஐ.நா செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை பத்து பேர் அந்தப் பதவியை வகித்துள்ளார்கள். போர்த்துக்கல்லைச் சேர்ந்த அந்தோனியோ குட்ரஸ் சமகால செயலாளர் நாயகமாவார்.

மேலும், 1955ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி இலங்கை ஐ.நா அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையானது, பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, பொருளாதார சமூகசபை, பொறுப்பாண்மைக்குழு, பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் செயலகம் என்ற 6 உள்ளமைப்புகளைக் கொண்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது ஐக்கிய நாடுகள் பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பெருப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தெரிவு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கின்றது.

இந்நிலையில், கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல், பன்னாட்டு சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல், மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்.

மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.

உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது போன்ற நோக்கங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுகின்றது.

இன்று ஐ.நா தினம்! ஐக்கிய நாடுகள் சபை என்றால் என்ன? அறிய வேண்டிய விடயம் - Reviewed by Author on October 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.