கொழும்பிலிருந்து யாழ். சென்ற பஸ் கோரவிபத்து! 06பேர் பலி, 30 பேர் படுகாயம், சாரதி கைது -
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மதுரங்குளி பகுதியில் குறித்த விபத்து இன்று காலைவேளையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, மதுரங்குளி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ். சென்ற பஸ் கோரவிபத்து! 06பேர் பலி, 30 பேர் படுகாயம், சாரதி கைது -
Reviewed by Author
on
November 06, 2017
Rating:

No comments:
Post a Comment