"இலங்கையில் 100 வயதை கடந்தவர்கள் 350 பேர்"
இலங்கையில் 100 வயதைக் கடந்த 350 பேர் பல மாவட்டங்களிலும் வசித்து வருகின்றனர் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்தத் தகவல் பெறப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்
இலங்கையில் 100 வயதைக் கடந்த 350 பேர் வாழ்கின்றனர்.100 வயதைக் கடந்த முதியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு ஒன்று மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் 100 வயதை கடந்தவர்கள் 350 பேர்"
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment