சிறுநீரக பாதிப்பு: இந்த 10 அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்.......
18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார்கள்.
சிலவகையான மருந்துகளாலும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுகிறது. சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் 60 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளுங்கள்.
அறிகுறிகள்
- வழக்கத்துக்கு மாறாக அதிகமாக அல்லது குறைவான அளவில் சிறுநீர் வெளியேறுவது.
- நுரைபோன்ற சிறுநீர் வருவது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.
- சிறுநீரகம் வெளியேறாமல் இருக்கும்போது, கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.
- சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
- மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.
- சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
- சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
- பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
- சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
- சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக மாறும்போது, இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.
சிறுநீரக பாதிப்பு: இந்த 10 அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்.......
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment