கேப்பாப்புலவில் 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்டுள்ள போதும், அந்த மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பிலக்குடியிருப்பு மக்களுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் கமகே, வீடமைப்பு அதிகாரசபையின் பொறியியலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய தினம் 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவில் 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
Reviewed by Author
on
November 23, 2017
Rating:
Reviewed by Author
on
November 23, 2017
Rating:


No comments:
Post a Comment