சவுதியில் 17 வருடங்கள் தவித்த இலங்கைப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம்....
சவுதி அரேபியாவில் முறையான ஊதியம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு, 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஊதிய நிலுவையாக 88 ஆயிரத்து 600 சவுதி ரியால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 44 வயதாகும் அவர் 2000- ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றார்.
சவுதியில் வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு ஆடுகளை மேய்க்கும் தொழில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் 8 ஆண்டுகள் ஊதியமாக 400 ரியால் வழங்கப்பட்டது.
பணி ஒப்பந்த காலம் முடிந்தும் அவர் இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அவரது உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்.
அதனையடுத்து சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் அதீப் எனும் புறநகர் கிராமம் ஒன்றில் ஆடு மேய்த்து வருவதாக தூதரகத்துக்குத் தகவல் கிடைத்தது.
தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக , அவர் தொழில் செய்த ஒப்பந்ததாரரிடம் இருந்து 17 வருடங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை 50 ஆயிரம் ரியால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அதனை விட அவரிடம் 38 ஆயிரத்து 600 ரியால் கைவசம் இருந்துள்ளது. தற்போது ஊதிய நிலுவைத் தொகையுடன் மொத்தமாக 88 ஆயிரம் 600 ரியால் பணத்துடன் அவர் இலங்கை திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் 17 வருடங்கள் தவித்த இலங்கைப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம்....
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment