வித்தியா கொலை வழக்கில் கைதான பிரதிப் பொலிஸ்மா அதிபரை விடாமல் துரத்தும் பாவங்கள் -
வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியைத் தப்பிக் வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
லலித் ஜயசிங்கவுக்கு எதிராக முன்னதாகவே இரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலில், வித்தியா கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிச் செல்ல உதவியதாக லலித் ஜயசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சியினரின் தேர்தல் பிரச்சார மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரைக் கொலை செய்தமைக்காக முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு ஆதரவாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இது போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் வெளிவந்த நிலையிலேயே லலித் ஜயசிங்கவுக்கு எதிராக மூன்றாவது முறையாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, காவத்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் லலித் ஜயசிங்க கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வித்தியா கொலை வழக்கில் கைதான பிரதிப் பொலிஸ்மா அதிபரை விடாமல் துரத்தும் பாவங்கள் -
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment