யாழில் இருந்து செல்லும் சகல வாகனங்களையும் வழிமறித்து தீவிர சோதனை -
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸார் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சகல வாகனங்களையும் வழிமறித்து தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை இன்றைய தினம்(21) பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மற்றும் கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக போதைப் பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா மற்றும் கொழும்பு நோக்கி ஏ09 வீதியூடாக பயணித்த பயணிகள் பேருந்துகள் உள்ளிட்ட சகல வாகனங்களும் இன்று இரவு 8.00 மணிமுதல் மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் வழிமறிக்கப்பட்டு சோதனைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான பயணப்பொதிகள், வாகனங்கள் மற்றும் சிற்றூர்திகளையும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை இன்றைய தினம்(21) பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மற்றும் கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக போதைப் பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா மற்றும் கொழும்பு நோக்கி ஏ09 வீதியூடாக பயணித்த பயணிகள் பேருந்துகள் உள்ளிட்ட சகல வாகனங்களும் இன்று இரவு 8.00 மணிமுதல் மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் வழிமறிக்கப்பட்டு சோதனைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான பயணப்பொதிகள், வாகனங்கள் மற்றும் சிற்றூர்திகளையும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
யாழில் இருந்து செல்லும் சகல வாகனங்களையும் வழிமறித்து தீவிர சோதனை -
Reviewed by Author
on
November 22, 2017
Rating:

No comments:
Post a Comment