கனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்த இலங்கை இளைஞன்!
கனடாவில் வாழும் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். ஒண்டாரியாவில் வசிக்கும் கமாஜ் சில்வா, என்ற இலங்கையர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
முதலீட்டு உதவிகளை வழங்குவதற்காக நடத்தப்படும் Dragons' Den என்ற நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டுள்ளார்.
பல வருடங்களாக சந்தைப்படுத்தல் துறையில் வேலை செய்து அந்தத் தொழிலை இழந்த நிலையில் 700 டொலர் முதலீடு செய்து புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார். குறித்த இலங்கையரினால் Sneakertub என்ற வர்த்தகத்தினால் தற்போது 200000 டொலர் இலாபம் ஈட்டப்படுகிறது. பிரபல தர பெயர்களின் கீழ் சந்தைக்கு வரும் புதிய நவநாகரிகம் கொண்ட காலணிகள், தொப்பிகள் மற்றும் பிற ஆடைகள் அடங்கிய பெட்டி ஒன்றை, மாத அடிப்படையில் தங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று வழங்குவதே சில்வாவின் வர்த்தக நடவடிக்கையாகும்.
தனது வர்த்தகத்தை மேலும் விஸ்தரிப்பதற்காக பங்குத்தாரர் ஒருவரே தேடி கொண்டிருந்த கமாஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அவரது வர்த்தக ஆலோசனையை பார்த்து ஆச்சரியமடைந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் பல்வேறு யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர்.அங்கிருந்த பிரபல வர்த்தகர்களில் ஒருவரை தனது பங்குதாரராக ஒருவரை சில்வா தெரிவு செய்துள்ளார்.
கனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்த இலங்கை இளைஞன்!
Reviewed by Author
on
November 22, 2017
Rating:

No comments:
Post a Comment