இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு: கணவர் நஞ்சருந்தி வைத்தியசாலையில் -
நுவரெலியாவில் இரு பிள்ளைகளின் தாயொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள மின்சார சபைக்கு அருகிலிருந்தே இன்று குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
குறித்த பெண்ணின் கணவர் கணேஷன் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்று தொழில் புரிந்து நாடு திரும்பிய நிலையில் தொழிலற்று இருந்து வந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர்களுக்கு இடையில் விவாகரத்தும் இடம்பெற்றுள்ளது.
நான்கு வயது மற்றும் ஒன்பது வயது பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்த குறித்த பெண் (பெரியசாமி சியாமலா) இன்று காலை ஹாவாஎலிய பகுதியில் கழுத்து மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை, பெண்ணின் கணவர் நஞ்சு அருந்திய நிலையில் இன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு பின்பே இவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு: கணவர் நஞ்சருந்தி வைத்தியசாலையில் -
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment