வடக்கு கிழக்கில் இனிவருகின்ற பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினமே?
இனிவருகின்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் துறையில் வேலை கிடைப்பது என்பது கடினமே என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள நியமனங்களில் எல்லாம் பட்டதாரிகள் நிரப்பட்டுவிட்டனர். எனவே இனிவருகின்ற பட்டதாரிகளுக்கு இந்த ஆசிரியர் துறையில் வேலை கிடைப்பது என்பது கடினமே.
பிள்ளைகளை வெறுமனே ஏதாவதொரு பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள்.
அவர்கள் படித்து முடித்த பின் தொழிற் சந்தையில் பெறுமதி மிக்க பட்டங்களைப் பெறுவதற்கு தனியார் கல்வி நிலையங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இனிவருகின்ற பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினமே?
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment