மரவட்டையை தொட்டதும் சுருள்வது ஏன்? உங்களுக்கு தெரியுமா?
சிவப்பு நிறத்தில் இருக்கும் மரவட்டை பூச்சிகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்ற பெயரும் உள்ளது. ஆனால் இதற்கு ஆயிரம் கால்கள் கிடையாது என்பதே உண்மை.
மழைக்காலத்தில் அதிகம் வரக்கூடிய இந்த மரவட்டை பூச்சுக்களை தொட்டவுடன் அது உடனே சுருண்டு கொள்ளும். அது ஏன் தெரியுமா?
மரவட்டையை தொட்டவுடன் சுருள்வது ஏன்?
ஆபத்து ஏற்படும் போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் நாம் அதை தொட்ட பின் அதனுடைய உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணரும்.
அதனால் தான் அதை தொட்டவுடன் தன் உடலை வட்டமாகச் சுருட்டிக் கொள்கிறது.
அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்து விட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பாக உள்ளது.
மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.
மரவட்டையை தொட்டதும் சுருள்வது ஏன்? உங்களுக்கு தெரியுமா?
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment