தனித்துவமாக புதிய சாதனையை படைத்துள்ள டோனி
சர்வதேச ஒருநாள் அரங்கில் வெற்றியின் போது இந்திய அணியில் அதிக போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் பட்டியலில் டோனி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி வீரர் டோனி தற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணியுடனான தொடரையடுத்து டோனி புதிய சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அணியின் வெற்றியின் போது அதிக போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினுக்கு (234 போட்டிகள்) அடுத்து இரண்டாவது இடத்தை டோனி பிடித்துள்ளார்.
டோனி இதுவரை 309 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 175 வெற்றியின் போது அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதுதவிர, சொந்த மண்ணில் வெற்றியின் போது அதிக போட்டிகளில் இடம் பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் அசாருதினை (70 வெற்றிகள்) பின்னுக்கு தள்ளி டோனி (71 வெற்றிகள்) இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
இதிலும் சச்சின் டெண்டுல்கர் (97 வெற்றிகள்) முதலிடத்தில் உள்ளார்.
தனித்துவமாக புதிய சாதனையை படைத்துள்ள டோனி
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment