மலையிலிருந்து பறந்து விமானத்திற்குள் குதிக்கும் வீரர்கள்: வைரலாகும் வீடியோ -
சுவிட்சர்லாந்தின் 'பிரெட் புகேன்' மற்றும் 'வின்ஸ ரேபட்' என்ற இரு இளைஞர்கள் பாராசூட்டிலிருந்து குதிப்பதில் வல்லவர்கள். தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள ‘விங் சூட்’ என்னும் மலையிலிருந்து குதிக்கும் சாகசத்தில் சாதனை படைக்க ஆசைப்பட்ட இவர்கள் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ள இவர்கள் இதற்காக பல புதிய யூகங்களை வகுத்துள்ளனர்.
சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்த இவர்கள், அந்த விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதில் குதிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஜெனிவாவில் உள்ள முக்கியமான மலைகளில் ஒன்றான 'ஜங்ப்ராவ்' மலையை தேர்ந்தெடுத்து அங்குள்ள காற்றின் வேகம், விமானத்தின் வேகம், அதில் குதிக்கும் இவர்களின் வேகம் என பலவற்றை கணக்கிட்டுள்ளனர்.
மேலும் விமானத்தின் நீளத்தையும் தங்களது உயரத்தையும் கூட சரியாக கணக்கிட்டுள்ளனர். இதன் மூலம் எந்த புள்ளியில், எந்த கோணத்தில் குதித்தால் சரியாக விமானத்திற்குள் செல்ல முடியும் என்று கணித்துள்ளனர்.
இதன்படி மலையிலிருந்து குதித்த இவர்கள் 10 நிமிடத்திற்கும் அதிகமாக வானில் பறந்து, இவர்களை சுற்றி பறந்து கொண்டிருந்த சிறிய விமானத்திற்குள் குதித்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதியப்பட்டது.
இணையத்தில் தற்போது வைரலாகியுள்ள அந்த வீடியோவை பார்த்த அனைவரும் பிரமிப்புடன் பாரட்டி வருகின்றனர்.
மலையிலிருந்து பறந்து விமானத்திற்குள் குதிக்கும் வீரர்கள்: வைரலாகும் வீடியோ -
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment