தமிழ் மக்கள் மீண்டும் போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்! கூட்டமைப்பு சாடல் -
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படா விட்டால் தமிழ் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போவதுடன், தமிழ் மக்கள் மீண்டும் ஒரு போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் போய்விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு - செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,”வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனைகள் பாராட்டத்தக்கவை.
தேசிய நல்லிணக்கத்திற்கான யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கும்.
நல்லிணக்கத்திற்காக மட்டும் 20 துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என அரசாங்கம் உறுதி கூறியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. எனவே, நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் இந்நாட்டிற்கு கிடைத்திருக்கும் நற்பெயர் இல்லாமல் போய்விடும்.
அத்துடன், சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் போய்விடும். தமிழ் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போவதுடன், தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீண்டும் போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்! கூட்டமைப்பு சாடல் -
Reviewed by Author
on
November 16, 2017
Rating:

No comments:
Post a Comment