பேரறிவாளனை விடுவிக்கக்கூடாது! - அ.தி.மு.க எம்.பி., எதிர்ப்புக் குரல் -
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ராஜீவ் காந்தி, இந்தியாவின் பிரதமராக இருந்தவர், எதிர்காலத்தில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த வரை படுகொலை செய்ததன் மூலம், மிகப்பெரிய சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஆறு கண்டங்களிலும் சமாதானப் புறாவாகப் பயணம் செய்து, குறிப்பாக ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தந்தவர்,
ராஜீவ் காந்தி. அவரை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்.
இது, ராஜீவ் காந்தி என்ற தனிப்பட்ட தலைவருக்கு எதிரான குற்றமாகக் கருத முடியாது. இந்தியாவுக்கு எதிரான, 100 கோடி மக்களுக்கு எதிரான கொடிய குற்றமாகக் கருதப்பட்டு, கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை நிறைவேறாமல் தடுப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள்.
ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன் நிரபராதி என்றும், அவருக்கும் இந்தக் குற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் சமீப காலமாக கோஷ்டிகானம் பாடி கோரிக்கையை முன்வைத்துள்ளன.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தண்டித்த குற்றவாளியை, நிரபராதி என்று கூறுவதை ஆதரிப்பதற்கு தமிழகத்தில் நிறைய அரசியல் கட்சிகள் முன்வந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
நீண்டகாலமாக இந்த வழக்கில் நான் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, எனது கண்டனத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டபோது, மற்றவர்களுக்குத் தண்டனையைக் குறைக்கக்கூடாது என்று தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தவர், அன்றைய முதல்வர் கருணாநிதி என்பதை இன்றைய தி.மு.க மறந்திருக்க வாய்ப்பில்லை.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகளுக்கு எதிராகத் தமிழகக் காங்கிரஸ் கட்சி கருத்து கூறாமல் மௌனமாக இருப்பது ஏன்?
ராஜீவ் காந்திக்கு காங்கிரஸ் கட்சி செய்கிற அஞ்சலி இதுதானா’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனை விடுவிக்கக்கூடாது! - அ.தி.மு.க எம்.பி., எதிர்ப்புக் குரல் -
Reviewed by Author
on
November 22, 2017
Rating:
Reviewed by Author
on
November 22, 2017
Rating:


No comments:
Post a Comment