தமிழ் மக்களை இனி ஒருபோதும் ஏமாற்ற முடியாது
உள்ளூராட்சித் சபைத் தேர்தலுக்காக வட மாகாணம் நோக்கி தமிழ் அரசியல் பறவைகள் வரவுள்ளன.
மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு களைப் பெறுவதே அந்தப் பறவைகளின் இலக்கு. வந்த பறவைகள் கூடு கட்டி இங் கேயே இருக்கப்போவது போலக் காட்டிக் கொள்ளும்.
மாவீரர்களை நினைவேந்துவதில்கூட இம் முறை கடும் போட்டி நிலவும். புலிகளின் தலை வர் பிரபாகரனின் பெயர் சொல்லுவதிலும் போட்டியிருக்கும்.
சிலவேளைகளில் தமிழ் அரசியல் கைதி களுக்காகத் தாங்கள் குரல் கொடுத்ததாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்ற உறுதிமொழிகளும் தரப்படலாம்.
ஏன்? நல்லாட்சியினரும் அவர்களின் வெற் றிக்காக தமிழ் அரசியல் கைதிகளின் வழ க்கை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றியும் ஒரு சிலரை விடுதலை செய்தும் உதவி செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக வழமையை விட தேர்தல் நாடகத்தில் நடிப்பு உச்சக்கட்டமாக இருக்கும்.
உள்ளூராட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால்தான் மேற்கொண்டு அரசியலமைப் புச் சீர்திருத்தம் பற்றி கதைக்கலாம். அதனை அமுல்படுத்தலாம். தீர்வு வருகின்ற நேரம் எங் களைப் பலப்படுத்துங்கள். தவறினால் கைக் குக் கிட்டியது வாய்க்குக் கிட்டாமல் போய்விடும்.
ஆகையால் உள்ளூராட்சித் சபைத் தேர்த லில் உங்கள் வாக்கு எங்களுக்கே.
உள்ளூராட்சி சபைகள் அனைத்தையும் நாங்கள் கைப்பற்றினால் வடக்கு கிழக்கை இணைக்க முடியும். நாங்கள் சொல்வதைத் தான் ஐ.நா சபை கேட்கும் அரிய சந்தர்ப்பம்; இறுதிச்சந்தர்ப்பம்.
அறிவில் உச்சமான எங்கள் தமிழ் மக்கள் தங்கள் கடமையை மறக்காமல் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும்.
சுயேட்சைக் குழுக்கள் பேரினவாதிகளிடம் பணம் பெற்று போட்டியிடுகின்றன. ஏனையவர் கள் ஆயுதக் குழுக்கள். அவர்கள் எங்களோடு இருந்தால் நாங்கள் பாவமன்னிப்பு வழங்குவோம்.
ஆனால் அவர்கள் பிரிந்து நிற்கின்றனர். ஆகையால் அவர்கள் ஆயுதக் குழுக்கள். அதோ பொது அணி என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் ஒரு பகுதியினர்.
மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட இவர்கள் சிறிய வீதிகளில் நின்றால் பெரும் எண்ணிக்கைபோல் தெரியும். அமைப்பின் ஆதரவாளர்கள். நாங்கள்தான் தமிழ் மக்க ளின் தலைவர்கள். எங்களை வெல்வதற்கு எவராலும் முடியாது வெற்றியின் நாளை சரித் திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்... இப்படி ஒரு பெரும் பிரசாரம் நடக்கும்.
ஆனால் இனிமேல் தமிழ் மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் ஏமாறவும் மாட் டார்கள். பாடம் புகட்டுவார்கள். உள்ளூராட்சி சபையின் கடந்த கால நிர்வாகம் செய்த ஊழல் கள் கண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பார்கள்.
அதுமட்டுமல்ல. நீங்கள் தமிழ் மக்களுக் குச் செய்தது சரியா என்று கேள்விக்குமேல் கேள்வி கேட்பர்.
தங்களின் தீர்ப்பை தமிழ் மக்கள் இம்முறை வழங்குவர். இது சத்தியம்.
தமிழ் மக்களை இனி ஒருபோதும் ஏமாற்ற முடியாது
Reviewed by Author
on
November 07, 2017
Rating:
Reviewed by Author
on
November 07, 2017
Rating:


No comments:
Post a Comment