கதவு திறந்தே உள்ளது: யாரும் வரலாம் போகலாம் என்கின்றது கூட்டமைப்பு -
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறுவது தொடர்பிலும், சில கட்சிகள் இணைவதற்கு உத்தேசித்துள்ளமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பதிலளிக்கையில்,
கூட்டமைப்பின் கதவு திறந்துதான் உள்ளது.
யாரும் வரலாம். யாரும் போகலாம். எமது கதவு மூடப்படவில்லை. எம்முடன் நேரடியாக இணைய விரும்புபவர்கள், எமது கொள்கைகளை ஏற்று இணையலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கதவு திறந்தே உள்ளது: யாரும் வரலாம் போகலாம் என்கின்றது கூட்டமைப்பு -
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment