வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி......
வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (14.11) காலை 10.30 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சுதர்சினி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது. இப் பேரணியானது மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்திருந்தது. குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு அரசாங்க மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளையினரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.
குறித்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள், உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு, நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற, விழிப்புணர்வுப் பதாதைகளைத் தாங்கியிருந்தனர்,

ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது. இப் பேரணியானது மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்திருந்தது. குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு அரசாங்க மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளையினரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.
குறித்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள், உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு, நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற, விழிப்புணர்வுப் பதாதைகளைத் தாங்கியிருந்தனர்,

வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி......
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment