பிரித்தானியாவை ஆட்டி படைக்கும் பனிப்பொழிவு.. 400 பள்ளிகள் மூடல்: விமான சேவை முடக்கம் -
பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் இரயில்களின் சேவைகள் முடங்கின. பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாம விமான சேவை மற்றும் இரயில்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் அருகாமையில் இருக்கும் சென்னிபிரிட்ஜ் பகுதியில் 28 சென்டிமீற்றர் அளவிலும், லண்டன் அருகாமையில் உள்ள ஹை வைகோம்பே பகுதியில் 12 சென்டிமீற்றர் அளவிலும் பனி பெய்துள்ளது.பிர்மிங்ஹம் நகரில் இருந்து புறப்பட்டு செல்லும் பத்துக்கும் அதிகமான விமான சேவைகள் மற்றும் சில இரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இரயில்கள் தாமதமாக வந்து செல்கின்றன.லண்டனில் நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டியின் மைதானம் பனி சூழ்ந்துள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் Birmingham பகுதியில் உள்ள 400 பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாட்டில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.பனிப் பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், Birmingham City Council இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பனிப் பொழிவின் காரணமாக ரோடுகள் அனைத்தையும் பனிகள் சூழ்ந்துள்ளது. இது போன்ற சமயத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்புவது பாதுகாப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரம் Birmingham இங்கு 400-க்கும் மேற்பட்ட 2 முதல் 5-வயது வரை படிக்கும் நர்சரி பள்ளிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன், பனியில் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன.
பிரித்தானியாவை ஆட்டி படைக்கும் பனிப்பொழிவு.. 400 பள்ளிகள் மூடல்: விமான சேவை முடக்கம் -
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment