மன்னார் தேவன் பிட்டி கிராமத்தில் மினி சூறாவழி-13 வீடுகள் சேதம்.(படம்)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(19) மாலை வீசிய மினி சூறாவழியின் காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள 13 வீடுகள் சேதமடைந்துள்ளது.
நேற்று(19) செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட குறித்த மினி சூறாவழியின் காரணமாக 13 வீடுகள்சேதமடைந்துள்ளதோடு,2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த மினி சூறாவழியில் சிக்சி தூக்கி வீசப்பட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் சிறிய கடை ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
13 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் பாதீக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதோடு,சேதமடைந்த வீடுகளை சீர் செய்து வருகின்றனர்.
குறித்த கிராம மக்களின் பாதீப்புக்கள் குறித்த மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு,மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தேவன் பிட்டி கிராமத்தில் மினி சூறாவழி-13 வீடுகள் சேதம்.(படம்)
Reviewed by Author
on
December 20, 2017
Rating:
No comments:
Post a Comment