மன்னாரில் இலங்கை தமிழரசு கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்தது-(படம்)
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் சமரசம் பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று புதன் கிழமை(20) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து இன்று புதன் கிழமை மாலை 3.10 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலக பகுதியில் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
--தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கீழ் இலங்கை தமிழரசுக்கட்சி,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மற்றும் புளெட் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
எனினும் ஆசன ஒதுக்கீடு,மற்றும் வட்டார ஒதுக்கீடு தொடர்பில் தமிழரசுக்கட்சி, மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் கடந்த சில தினங்கலாக முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
-இந்த நிலையில் குறித்த இரு கட்சிகளும் தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்ட நிலையில் இன்று புதன் கிழமை மாலை ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இலங்கை தமிழரசு கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்தது-(படம்)
Reviewed by Author
on
December 20, 2017
Rating:
No comments:
Post a Comment