2016-17 லாலிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்சி
2016-17-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான லாலிகா கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பார்சிலோனா நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தாண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ரியல் மாட்ரிட் அணியை கிளப் உலககோப்பை, யூயேபா கோப்பை உட்பட சில முக்கிய தொடர்களில் வெற்றிபாதைக்கு அழைத்து சென்ற அந்த அணியின் கேப்டனும் முன்னணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்படும் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், இந்தாண்டிற்கான லாலிகா சிறந்த வீரருக்கான விருது பார்சிலோனா அணி கேப்டனும் முன்னணி விரருமான லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.
மெஸ்சி 2016-17 லாலிகா சீசனில் 34 போட்டிகளில் விளையாடி 37 கோல்கள் அடித்ததோடு, 12 முறை மற்ற வீரர்கள் கோல் போட உதவியுள்ளார். அதே சமயம் ரொனால்டோ 25 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 6 முறை கோல் போட உதவியுள்ளார். இதனால் இந்தாண்டிற்கான விருது மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.
2016-17 லாலிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்சி
Reviewed by Author
on
December 20, 2017
Rating:

No comments:
Post a Comment