அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மீண்டும் டெலோ விற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கருத்து முறண்பாடு-(படம்)

மன்னார் நகர சபை ஆசன பங்கீடு தொடர்பில் மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) விற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19) இரவு கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவிற்கு வழங்கப்பட்டுள்ள சில வட்டாரங்களில் டெலோ நியமித்துள்ள வேட்பாளர்கள் சிலரை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள முகவரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடுமையாக தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதனால் மன்னார் நகர சபை ஆசன பங்கீடு தொடர்பில் மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) விற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19) இரவு கருத்து முறண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

-நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக நியமிக்கப்பட்ட ஒரு சில வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடுமையாக தெரிவித்தோடு,அங்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நேற்றைய தினம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

இதனால் மன்னாரில் டெலோ ஆதரவாளர்களுக்கும், தமிழரசுக்கட்சிக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மீண்டும் டெலோ விற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கருத்து முறண்பாடு-(படம்) Reviewed by Author on December 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.