வெளிநாடுகளில் 334 இலங்கையர்கள் உயிரிழப்பு: அறிக்கை வெளியீடு -
கடந்த 9 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில், 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 52 பேர் காணாமல் போய் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும், 247 பேர் சுகயீனமுற்று உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் 334 இலங்கையர்கள் உயிரிழப்பு: அறிக்கை வெளியீடு -
Reviewed by Author
on
December 06, 2017
Rating:

No comments:
Post a Comment