உலகின் மிகவும் இளமையான ராணி யார் தெரியுமா? -
பூட்டானின் ராணியான Jetsun Pema தனக்கு 21 வயது இருக்கும் போது அரியணையை எடுத்துக் கொண்டார். தற்போது 27 வயதாகும் இவரே உலகின் மிகவும் இளமையான ராணி என பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், Jetsun Pema திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் லண்டனில் உள்ள Regents கல்லூரியில் உளவியல் மற்றும் கலை வரலாற்றோடு சர்வதேச உறவுகள் தொடர்பாக படித்ததாகவும், படிப்பை முடித்து பூட்டான் திரும்பிய இவர், Jigme Khesar Namgyel Wangchuck-ஐ திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் Jetsun Pema பற்றி ராஜாவான Jigme Khesar Namgyel Wangchuck கூறுகையில், நீங்கள் உங்களுக்கு சரியான நபரை பார்க்கும் வரை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருப்பதில் தவறில்லை, அந்த வகையில் திருமணம் செய்து கொள்வதற்கு காத்திருந்த நான், தற்போது தான் காத்திருந்தமைக்கு பயனாக சரியான பெண்ணை தான் திருமணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2016-ஆம் ஆண்டு அழகான குட்டி இளவரசர் பிறந்தார்.
அவருக்கு Jigme Namgyel Wangchuck. என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் Jetsun Pema பூட்டானில் Royal Society for Protection of Nature என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அங்கிருக்கும் Ability Bhutan Society, Bhutan Kidney Association, Bhutan Red Cross Society ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் இளமையான ராணி யார் தெரியுமா? -
Reviewed by Author
on
December 06, 2017
Rating:

No comments:
Post a Comment