வாலுடன் இருக்கும் 3 வயது சிறுவன்: அனுமான் கடவுள் என நம்பும் மக்கள் -
கிருஷ்ணா யாதவ் என்ற சிறுவன் பிறக்கும்போதே முதுகுபகுதியின் பின்புறத்தில் வால் இருந்துள்ளது. இது கடவுளின் ஆசிர்வாதம் என இச்சிறுவனின் பெற்றோர் நம்பியுள்ளனர்.
இந்து கடவுளான அனுமானுக்கு இருப்பது போன்று வால் இருப்பதால், அனுமானின் ஆசிர்வாதத்தோடு எனது மகன் பிறந்துள்ளான் என இச்சிறுவனின் தந்தை ராம்சுந்தர யாதவ் தெரிவித்துள்ளார்.
இச்சிறுவனுக்கு தற்போது 3 வயதாகியுள்ள நிலையில், வாலும் வளர்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் இச்சிறுவனிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர்.
மேலும், அறுவை சிகிச்சையின் மூலம் இந்த வாலினை நீக்குவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை என தந்தை தெரிவித்துள்ளார், ஆனால் கர்ப்பகாலத்தில் போலிக் அமிலம் தாய்க்கு குறைவான அளவில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாலுடன் இருக்கும் 3 வயது சிறுவன்: அனுமான் கடவுள் என நம்பும் மக்கள் -
Reviewed by Author
on
December 24, 2017
Rating:
No comments:
Post a Comment