மன்னார் மக்களுக்கோர் அறிவுறுத்தல்......!
மன்னாரில் தற்போது பண்டிகைக்கால கடைத்தொகுதிகள் வந்துள்ளதால் மன்னார் TOWN பகுதியில் சனப்புழக்கம் அதிகமாகவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பண்டிகைக்கால கடைத்தொகுதிக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கா வரும் மக்கள் தொகை அதிகமாகியுள்ளது.
அதிகமான மக்கள் வருகையால் சனநெருக்கடி ஏற்படுவதால் போக்குவரத்து பிரச்சினையும் விபத்துக்கள் நடைபெறுவத்தற்கு ஏற்ற சூழல் இருப்பதால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்திருக்கும் வியாபாரிகளினதும் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற பொதுமகளினதும் வாகனங்கள் பாதையோரங்களில் தரித்து நிற்பதால் போக்குவரத்து சிரமமாய் தான் உள்ளது
முடிந்தவரை வாகன சாரதிகள் வாகனங்களை போக்குவரத்திற்கும் மக்களின் பாவனைப்பகுதிகளில் நிறுத்தாமல் ஒதுக்குப்புறமான ,இடங்களில் நிறுத்துங்கள்
- வாகன சாரதிகள் வேகம் குறைத்தல் வேண்டும்
- பொதுமக்கள் அவதானமக செயற்படல்
- பெற்றோர்கள் பிள்ளைகள் மட்டில் அவதானமாய் இருத்தல்(சிறியவர்கள் அதிகமாக உலாவுகின்றார்கள்)
- தங்களின் உடமைகளில் அவதானமாய் இருத்தல்
- தேவையற்ற அநாகரிக செயல்களில் ஈடுபடாமை(யாவரும்)
கடமையில் இருக்கும் பொலிசாரும் நகரசபை அலுவலகர்களும் விழிப்புடனும் பொதுமக்கள் அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட்டால் விபத்துக்கள் அசம்பாவிதங்களை தடுக்கலாம்......
-மன்னார்விழி-
மன்னார் மக்களுக்கோர் அறிவுறுத்தல்......!
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment