அண்மைய செய்திகள்

recent
-

நம்பினால் நம்புங்கள்: 40 சதவீதமான புற்றுநோய் மரணங்களை இவ்வாறு தவிர்க்கலாம் -


மனித உயிர்களை களையெடுக்கும் கொடிய நோயான புற்றுநோயை குணப்படுத்த இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனாலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
இவ் அதிகரிப்புக்கு மனித செயற்பாடுகளே முக்கிய காரணமாக விளங்குகின்றன. அத்துடன் அவர்களின் வாழ்க்கை முறைகளும் பெரும் பங்கு வகிக்கின்றமை வெளிப்படையானதே. அதாவது அதிக மதுபான பழக்கம், புகைப்பழக்கம் என்பனவும் காரணங்களாக அமைகின்றன.

இது போன்ற வாழ்க்கை முறைகளை மாற்றியமைப்பதன் ஊடாக புற்றுநோயால் உலகில் இடம்பெறும் மரணங்களில் 40 சதவீதமானவற்றினை தவிர்க்க முடியும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UV கதிர்கள் போன்ற இயற்கை காரணிகளும் புற்றுநோயை தோற்றுவிக்கின்ற போதிலும் புகைத்தல் மற்றும் மது அருந்துதலை வெகுவாக குறைத்தாலே புற்றுநோய் தாக்கம் குறைவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவை அடிப்படையாகக் கொண்டு 2013ம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 38 சதவீதமானவர்கள் புற்றுநோயினால் மரணித்துள்ளனர்.
இச் சதவீதமானது மொத்த எண்ணிக்கையில் 16,700 நபர்களை குறித்து நிற்கின்றது.
நம்பினால் நம்புங்கள்: 40 சதவீதமான புற்றுநோய் மரணங்களை இவ்வாறு தவிர்க்கலாம் - Reviewed by Author on December 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.