ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு:
- சுயேச்சை - தினகரன்: 89, 013
- அ.தி.மு.க. - மதுசூதனன்: 48,306
- தி.மு.க. - மருதுகணேஷ்: 24,651
- நாம் தமிழர் - கலைக்கோட்டுதயம்: 3,802
- பா.ஜ.க. - கரு. நாகராஜன்: 1,368
- நோட்டா: 2,348
களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு விசில் அடித்து சாதித்து காட்டி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவராகவே தினகரன் அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.
ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியின் மூலம் நான் இல்லாமல் தமிழக அரசியல் களம் இல்லை என்பதை தினகரன் ஆணித்தரமாகவே உணர்த்தி இருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment