சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா -
"இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல்-லின் அடுத்த சீசனில் தன்னிடம் இருக்கும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாக கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸில் டோனி மற்றும் ரெய்னாவை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் இயக்குனர் ஜார்ஜ் ஜான் கூறுகையில், டோனி, ரெய்னாவை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.
மூன்றாவது வீரர் குறித்து இனிமேல் தான் முடிவு எடுக்கப்படும், டிவைன் பிராவோ, மெக்குல்லம், டுபிளஸ்ஸி, ஆண்ட்ரூ டை போன்ற வீரர்கள் பரிசீலனையில் உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா -
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment