800 சிக்சர்கள் விளாசி அதிரடி மன்னன் கெயில் உலக சாதனை.....
டி20 போட்டிகளில் 800 சிக்சர்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் ஐபிஎல் போன்று நடத்தப்படும் வங்கதேச பிரிமியர் லீக்கில் கிறிஸ் கெயில் ராங்க்பூர் ரைடர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தத் தொடரின் நாக்அவுட் சுற்றில் ராங்க்பூர் ரைடர் அணி குல்னா டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் ரைடர்ஸ் அணி 15.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 171 ஓட்டங்களை எடுத்து குல்னா அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் கெயில் 51 பந்துகளில் 126 ஓட்டங்களை குவித்தார், இதில் 14 மெகா சிக்சர்கள் அடக்கமாகும்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் 800 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை கெயில் படைத்துள்ளார்.
கெயில் 126 ஓட்டங்களை அதிரடியாக குவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
800 சிக்சர்கள் விளாசி அதிரடி மன்னன் கெயில் உலக சாதனை.....
 Reviewed by Author
        on 
        
December 09, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 09, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 09, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 09, 2017
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment