நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானம்
இந்த விமானம், தனது முதல் ஒரு மணி நேர பயணத்தை செய்துள்ளது.
கிட்டத்தட்ட போயிங் 747 வகை விமானத்தைபோலவே அளவுள்ள இந்த விமானம், நான்கு டர்போபாப் எஞ்சின்களை கொண்டது.
இது, குவாண்டூங் பகுதியிலுள்ள ஸுஹாய் விமான நிலையித்திலிருந்து புறப்பட்டது.
இந்த விமானத்தால், 50 பயணிகளுடன் தொடர்ந்து 12 மணிநேரம் பறக்க முடியும்.
இதில், தீயணைப்பு படைக்கான உபகரணங்கள், கடற்படை காப்பாற்றுதல் பணிகளுக்கான உபகரணங்கள் உள்ளன.
அதேபோல, இது இராணுவப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், பிரச்சினைக்குரிய தென் சீன கடல் பகுதிகளில் இதை பயன்படுத்த முடியும்.
குன்லாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தால், சீனாவின் எல்லை என்று அந்நாட்டால் கூறிக்கொள்ளப்படும், தென்கோடிக்கும் செல்ல முடியும்.
அந்நாட்டு ஊடகமான, ஷின்ஹுவா, இந்த விமானத்தை, கடல், தீவுகள் மற்றும் கடற்பரப்புகளை பாதுகாக்கும் சக்தி என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விமானம் கிளம்பும் காட்சி, அந்நாட்டு ஊடகத்தில் நேரலையாக காண்பிக்கப்பட்டதோடு, அது தரையிறங்கும் போது மக்கள் கொடி அசைத்து, இராணுவ இசையை இசைத்து வரவேற்றனர்.
இந்த விமானம் எட்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது.
இது கிளம்பும் எடை, 53.5 டன்கள், இதன் இறக்கைகள், 38.8 மீட்டர் அளவு உள்ளன.
இதேபோன்ற 17 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென் சீன கடற்பகுதி குறித்த சீனாவின் கொள்கைகள், பல அண்டை நாடுகளின் வேறுபட்ட கருத்தை பெற்றது.
கடந்த ஆண்டு, ஐ.நா.வின் தீர்ப்பாயத்தில், சீனா அந்த பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோரியது நிராகரிக்கப்பட்டது.
இந்த விமானம் சாதனை படைத்திருந்தாலும், செல்வந்தராக இருந்த ஹாவர்ட் ஹியூஸின் விமானத்தை விட சிறியதாகவே உள்ளது.
ஹியூஸின் ஹெச்.4 ஹெர்குலஸ் விமானத்தின் இறக்கைகள், 97.54 மீட்டர் இருந்தன.
1947இல், ஒரே ஒருமுறை மட்டும், 26 விநாடிகளுக்கு பறந்த அந்த விமானம், அதன்பிறகு பறக்கவே இல்லை.
ஒரிகானில் உள்ள அருங்காட்சியகத்தில் அந்த விமானம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானம்
Reviewed by Author
on
December 27, 2017
Rating:
Reviewed by Author
on
December 27, 2017
Rating:


No comments:
Post a Comment