மீண்டும் தயாராகிறது வடகொரியா -
வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக ஐ.நா அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்திருந்த.ஹூவாசாங்-15 சோதனையில் கடும் அதிருப்தி அடைந்து மேலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
இனி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, செயற்கைகோள்களை செலுத்துவது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான எந்த சோதனையிலும் ஈடுபடக்கூடாது என்று வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென்கொரியாவில் இருந்து வெளியாகும் ஜூன்காங்க் இல்போ என்னும் நாளிதழ், வெளியிட்டுள்ள செய்தியில், அண்மையில் எங்களுக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், வடகொரியா ஒரு புதிய செயற்கைகோளை தயாரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு குவாங்மியோங்சாங்-5 என்று பெயர் சூட்டியும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.அவர்களின் திட்டம், அதிநவீன கேமராக்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் கொண்ட ஒரு செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்தவேண்டும் என்பதாகும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
எனினும் அந்த செயற்கைகோள் உளவு பார்க்கும் பணிக்காக ஏவப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த தகவலை வடகொரியாவில் இருந்து வெளியாகும் ரோடாங் சின்முன் என்ற நாளிதழும் உறுதி செய்துள்ளது.குவாங்மியோங்சாங்-5 செயற்கைகோள் இன்னும் ஓரிரு வாரங்களில் அது ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தயாராகிறது வடகொரியா -
Reviewed by Author
on
December 27, 2017
Rating:
Reviewed by Author
on
December 27, 2017
Rating:


No comments:
Post a Comment