அண்மைய செய்திகள்

recent
-

கனேடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கை பெண்! -


இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கனடாவில் குடியேறிய தமிழ் பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் பல்வேறு விதமான உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.இதன்மூலம் பல்வேறு சேவைகளை விஜிதா தர்மலிங்கம் என்ற பெண் செய்து வருவதாக கனேடிய ஊடகங்கள் பாராட்டி தகவல் வெளியிட்டுள்ளன.1992 ஆம் ஆண்டு விஜிதா தர்மாலிங்கம் இலங்கையில் இருந்து தனது குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த விஜிதா, தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய எண்ணியுள்ளார்.தமிழ் மொழியின் மூலம் தனது சேவைகளை செய்யும் வகையில் அன்னை தந்த இல்லம் (ATI) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். பல்வேறு குறைபாடுகள் உள்ள மக்களின் தேவைகளை ATI அறக்கட்டளை பூர்த்தி செய்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ATI அறக்கட்டளை உதவிகளை வழங்கியதனால் குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது.

குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம் என அறக்கட்டளையின் துணைத் தலைவரான ஆரணி தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். ஆரணி தர்மலிங்கம் என்பவர் விஜிதாவின் இளைய மகளாகும். 1987 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்சக்கட்டத்தில், தர்மலிங்கத்தின் வீடு போர் வலயத்தின் மத்தியில் சிக்கிக் கொண்டது. இதன்போது விஜிதா மற்றும் அவரது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

தப்பிச் செல்லும் போது கர்ப்பமாக இருந்த விஜிதா, விபத்துக்குள்ளாகினார். விபத்தில் இருந்து மீண்டு வந்த விஜிதா மீராவை பெற்றெடுத்தார், எனினும் மீராவின் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. மூளை பாதிக்கப்பட்ட மகளை ஆதரவற்ற இல்லத்தில் வழங்குமாறு பல உறவினர்கள் விஜிதாவிடம் கூறியுள்ளனர். எனினும் தனது மகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை வழங்க வேண்டும் என விஜிதா தர்மலிங்கம் எண்ணினார். விஜிதா தர்மலிங்கம் தனது மகளுக்கான ஒரு வழியை கண்டுபிடித்தார். மகள் போன்று பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கொண்ட தமிழ் சமூகத்திற்காக அவர் சமூக சேவை செய்து வருகிறார்.அதற்கமைய 2014ஆம் ஆண்டு அவர் அறக்கட்டளை ஆரம்பித்தார். இதன் ஊடாக கனேடிய வாழ் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் பயனடைந்து வருவதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனேடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கை பெண்! - Reviewed by Author on December 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.