அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் - உதவி கோரும் பிள்ளைகள் -


கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் ரொறண்டோவில் வசிக்கும் ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் இரு பிள்ளைகளுக்கு உதவி செய்யுறுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணான ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண்ணின் சகோதரி சுமி சீவரத்னம் இந்த உதவியை கோரியுள்ளார்.
“எனது பெயர் சுமி சீவரத்னம். நான் ஒன்ராரியோவில் வாழ்கின்றேன். அண்மையில் தனது தாயை இழந்த மகள் மற்றும் மகனுக்கு உதவுங்கள். அவர் Alexander Stirling இளநிலைப் பாடசாலையில் மதிய உணவு மேற்பார்வையாளராக கடமையாற்றினார்.
கடந்த 12ஆம் திகதி அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். பல்கலைகழகத்தில் தாதியாக முதலாம் ஆண்டில் கற்கும் மகள் சோபியா மற்றும் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மகன் லகீவனையும் உலகில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இந்த பிள்ளைகளின் கற்கை மற்றும் எதிர்கால தேவைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து உதவிகளும் வரவேற்கப்படும்” என அவர் கோரியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடாவில் வசித்த யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கை சேர்ந்த ஜெயந்தி சீவரத்னம் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் - உதவி கோரும் பிள்ளைகள் - Reviewed by Author on December 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.