மன்னார் நகரசபைக்கு வருமானம்… ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம்...
மன்னார் நகரசபையினால் வருடா வருடம் நடைபெறுகின்ற பண்டிகைக்கால கடைத்தொகுதி இம்முறையும்குத்தகைக்குவிடப்பட்டுள்ளது.
இம்முறை இக்குத்தகைப்பணமானது கடந்த வருடங்களை விட அதிகப்படியாக ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம் இலாபமாக பெற்றுள்ளது.
மொத்தமாக 260 கடைத்தொகுதிகளுக்கு சுமார் ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம் ருபாயினை இம்முறை நகர சபை இலாபமாக பெற்றுள்ளது.
ஒரு கடைப்பகுதிக்கான(சதுரடி) tender 4500ரூபா முதல்20000ரூபா வரையும் மொத்தம் 260 கடைகளுக்கான 34 இலட்சத்தி 89ஆயிரம் ரூபா கேள்விகோரல் முன்வைக்கப்ட்டபோதும் வியாபாரிகளின் அதிகமான கேள்வி கோரலினால் தான் இந்த தொகை ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம் கிடைத்துள்ளது.(ஒவ்வொரு கடைத்தொகுதிக்கும் தனியான விண்ணப்பம் பதிவு மேற்கொண்டு மூடிய பெட்டியினுள் கேள்விகோரல் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு) வியாபாரிகள் முன்னிலையில் open tender மூலம் பகிரங்கமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் 19-20-12-2017 திகதிகள் நடைபெற்றதுடன் 21-12-2017 முதல்31-12-2017 வரையான காலப்பகுதிகளில் மட்டுமே இக்கடைத்தொகுதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தினை விட இம்முறை குத்தகைக்குவிடப்பட்ட கடைத்தொகுதிகளுக்கு
கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டன
- குத்தகை தொடர்பான விளம்பரப்படுத்தல் தினக்குரல் மற்றும் தினமின பத்திரிகை வாயிலாகவும் அறிவித்தல் விடப்பட்டது.
- ஒரு நபருக்கு இரண்டு கடைகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
- கடையொன்றினை பெறுபவர் அவருடன் வேலை செய்யும் இருவருக்குமான தேசிய அடையாள அட்டை பிரதிகள் இன்னும் சில ஆவணங்கள் அவசியம் கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கவேண்டும்.
- குறித்த அளவுகளுக்கு மேல் கடையை விஸ்தரிக்க முடியாது.
- முன்வைப்பு பணமாக 10% செலுத்த வேண்டும்
- கடைகள் யாருக்கும் கைமாறத்தகாது.
- மேற்குறித்த விடையங்கள் பின்பற்ற தவறினால் முன்பணவைப்பும் மீளளிக்கப்படமாட்டாது கடையும் பறிமுதல் செய்யப்படும்.
- 2012---12இலட்சமும்
- 2013---55இலட்சமும்
- 2014---40இலட்சமும்
- 2015---56இலட்சமும்
- 2016---75இலட்சமும்
- 2017--- 10.241.021.98(ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம்)
X.L. றெனோல்ட் நகரசபைச்செயலாளரிடம் கிடைக்கப்பெற்ற ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம் நிதியின் மூலம் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் என வினவியபோது…
இம்முறை அதிகமான தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இந்தாண்டு செய்யப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கு என 58இலட்சம் ரூபாவினை நகரசபையினால் பெறப்பட்டுள்ளது. மீதியாகவுள்ள 4.441.021.98 ரூபாவினை பொதுஅமைப்புக்களுடன் கலந்தாலோசித்து மிகவும் முக்கியமான அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
-வை.கஜேந்திரன்-

மன்னார் நகரசபைக்கு வருமானம்… ஒரு கோடியே 2இலட்சத்தி41ஆயிரத்தி 21.98சதம்...
Reviewed by Author
on
December 21, 2017
Rating:

No comments:
Post a Comment